என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆடி அமாவாசை"
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் பூசாரி, அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன.
அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே, அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, நீர் நிலை களை தெய்வமாக வழிபடுவது இறையன் பர்களின் வழக்கம்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும் புனிதம் வாய்ந்தவை மட்டுமல்ல; தெய்வாம்சமும் பொருந்தியவையாகும். இவற்றில் சரஸ்வதி நதியை நேரில் காண இயலா விட்டாலும், அலகாபாத் திரிவேணியில், கங்கை நதியுடன் சரஸ்வதி நதி கலக்குமிடத்தை அங்கு சென்றவர்கள் தரிசித்திருப்பார்கள். கங்கை நதி சற்று மங்கலாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கங்கையின் அடியில் சரஸ்வதி நதி வெண்மை நிறத்தில் சங்கமமாவதை அங்குள்ள பண்டாக்கள் (வேதவிற்பன்னர்கள்) காட்டுவர்.
ஆடி அமாவாசையன்று, தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
அன்றைய தினம் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன.
எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம், ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதி யன்று பரிகாரம் செய்வது நல்லது. மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப் படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன் னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்ன தானம் செய்வதும், மாற்றுத் திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச் சியைக் கொடுக்கும்.
நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூஜைய றையில் முன்னோர்களின் படங்கள் முன்னிலையில் அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபட வேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர்களும் சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை, ஜமால் உசேன் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 37). இவர் சிங்கபூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை ராமையன், தாய் சேதும்மாள், மனைவி மலர்விழி, மகன் பவித்ரன் ஆகியோர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஆடி அமாவாசை என்பதால் ஒரத்தநாட்டில் உள்ள கோவிலுக்கு செல்ல வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அனைவரும் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 2 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமையன் மற்றும் குடும்பத்தினர் இது குறித்து தமிழ் பல்கலைக் கழக போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு இது குறித்து வழக்குபதிவு செய்தனர். வீட்டின் கதவை உடைத்து பணம் - நகைகளை திருடி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலுக்கு சென்ற நேரத்தில் கதவை உடைத்து பணம் - நகைகள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் அம் மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனை தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 11.40 மணிக்கு அங்கிருந்து உற்சவ அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் வைத்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அப்போது பூசாரிகள் பக்திப்பாடல்களை பாடினார்கள்.
நள்ளிரவு 12.45 மணியளவில் அம்மனுக்கு அர்ச்சனையும், அதனை தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரி சனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
விழாவுக்கான ஏற் பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.
நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம். ஆடி அமாவாசை தினத்தன்று எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.
அறிவுள்ள மனிதன் தொழில் மூலமாக தான் பெறும் செல்வத்தை மூன்று பாகங்களாக பிரித்து அதில் தர்ம காரியங்களுக்கு ஒரு பாகம். வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள ஒரு பாகம். கஷ்டம் ஏற்படுகையில் ஒரு பாகம் என்று பங்கீடு கொள்ள வேண்டும். இதில் முதல் பாகம் அன்னதானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது. தேவர்களை பூஜிப்பது, பித்ருக்களை பூஜிப்பது, ஆசாரங்களை கடை பிடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும். இவ்வாறு சிவபெருமான் கூறினார்.
அமாவாசையன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பாகப் பேசப்படுவதற்குக் காரணம், சூரிய சந்திர கிரகணங்களின் உந்துதலால் கடலின் ஆழ்பகுதியில் அமிழ்ந்திருக்கும் சங்கு, பவளம் மற்றும் கடல்வாழ் ஜீவசக்திகள் மேலே வருகின்றன. அப்போது கடல்நீருக்கு ஒருவித சக்தி ஏற்படுவதால், அந்த நீரில் குளிக்கும்போது தோஷங்கள் விலகும்; உடல் நலம்பெறும்.
அன்று நம் முன்னோர்களுக்கு உரிய வழிபாடுகள் செய்த பிறகு சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனால் சனிபகவனால் உண்டாகும் தோஷங்கள் விலகும். சனிக்கிழமையன்று தர்ப்பணம் செய்வதால் சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகமாகும்.
பின்னர் மீண்டும் நீராடி விட்டு கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே தென்பட்டது. பக்தர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அதிகளவில் வந்திருந்ததால் கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதேபோல குழித்துறை வாவுபலிமைதானத்திலும் பக்தர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். குழித்துறையில் இன்று வழக்கத்தை விட கேரள பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்தது.
தற்போது கேரளாவில் கனமழை பெய்து வருவதால் ஆறு மற்றும் நீர்நிலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்ப்பணம் கொடுக்கக்கூட இடம் இல்லாத வகையில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
கேரளாவில் அதிக மக்கள் குவிந்து தர்ப்பணம் கொடுக்கும் ஆலுவா சிவன் கோவில் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் அங்கு தர்ப்பணம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கேரள பக்தர்கள் மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதியான குழித்துறைக்கு வந்து புனித நீராடி பலிகர்ம பூஜைகளை நிறைவேற்றினர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்து இருந்து தர்ப்பணம் கொடுத்தனர்.
கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தர்ப்பணம் கொடுக்கும் அந்த பகுதி மக்களும் இன்று குழித்துறையில் குவிந்து இருந்தனர்.
கன்னியாகுமரியிலும் கேரள பக்தர்களின் கூட்டத்தை அதிக அளவில் காண முடிந்தது.
இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர். அவர்கள் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை ஒன்றாக அமரவைத்து அவர்களின் மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.
கடந்த ஆண்டு போதிய மழையில்லாமல் காவிரி ஆறு வறண்டு காணப்பட்டது. இதனால் ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் பிண்டங்களை கரைக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
ஆனால் இந்த ஆண்டு கர்நாடாகாவில் பலத்த மழை பெய்ததால் தொடர்ந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இரு கரைகளையும் தொட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இதில் திரளான பக்தர்கள் தடுப்பு வேலிக்குள் நின்று ஆற்றில் புனித நீராடினர்.
இதில் ஏராளமான பெண்களும் திரண்டு வந்து முன்னோர்களை நினைத்து வழிபட்டு அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக படித்துறை அருகே முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
காவிரி கரையிலேயே கட்டுப்பாட்டு அறை அமைத்து 500-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ரப்பர் படகுகளில் தீயணைப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி திரளான பக்தர்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதனால் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் நன்மைகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இதன் காரணமாக இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்திற்கு வருவார்கள். அதன்படி ஆடி அமாவாசையான இன்று ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை முதலே ரெயில், வேன், பஸ், கார்கள் மூலம் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
ஆடி அமாவாசையான இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
முன்னதாக கோவிலில் இருந்து ராமர் அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளினார். பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அப்போது அங்கு கூடி இருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கடலில் நீராடிய பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினர். இதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஆடி அமாவாசையையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் சி.சி. டி.வி. காமிரா மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்புவதற்கு வசதியாக ராமேசுவரத்தில் இருந்து மதுரை, நெல்லை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் வடமாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ரெயில்களிலும் கூட்டம் அலை மோதியது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ராமேசுவரம் நகராட்சி நிர்வாகம் செய்து இருந்தது.
இதேபோல் பிரசித்தி பெற்ற விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கசுவாமி கோவிலிலும் ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பே மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆடி அமாவாசையான இன்று ஏராளமான பக்தர்கள் சதுரகிரியில் குவிந்தனர்.
மலைமேல் உள்ள சந்தன-சுந்தரமகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. பக்தர்கள் வருகையையொட்டி போலீசார் மற்றும் வனத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். #aadiamavasai #pitrutharpanam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்